டும். டும்.. டும்...
இன்னிக்கு மத்தியானம் லன்ச்சுக்கு திருப்பதி பீமாஸ். ஒரு non-spicy தளி. சப்பாத்தி-குருமா, (ப்ர)சாதம், மோர் குழம்பு, அவியல், சாம்பார், பருப்பு குழம்பு, சாத்தமது, பீன்ஸ் கரியமுது, அப்பளம், தயிர், ஊருகாய், காரட் அல்வா. ரெண்டு மூணு நாளா ஈ-மேயில் திறந்தா ஒரே கல்யாண பத்திரிகை. கல்யாண சீசன். ஆகஸ்ட் 20, 21, ... தினைக்கும் ஒரு கல்யாணம். கல்யாண சாப்பாடு சாப்பிட்டு எவ்வளவு வருஷம் ஆச்சு. ஹூம்! அந்த நினைப்புலதான் இன்னைக்கு பீமாஸ் பக்கத்துல தலையைக்காமிக்கலாம்னு புரப்பாடு. என்னதான் இருந்தாலும் கல்யாண சாப்பாடு மாதிரி வருமா.
இலையைப்போட்டு, தண்ணி தெளிச்சு, ஒரு மூலைல சக்கரை, வாழைப்பழம், அதுக்கப்புறம் பருப்பு, வகைவகையா கரியமுது. இது பரிமாரும்போது, பந்தியில தூரத்துல அப்பளம் நொருங்கற சத்தம் அப்படியே ஒரு தக்காளி சூப் அப்பிடைசர் மாதிரி வயித்தை உருட்ட ஆரம்பிக்கும் அந்த ஒரு ஃபீலிங். அடடடடா, நினைச்சுப்பாத்தாலே ஒரு கிக்குதான்.
4 comments:
கல்யாண சாப்பாட்டின் மறு பக்கம்?
ஆர்வக்கோளாரில் சாத்தம்து சாதம் ஒரு கட்டு கட்டிவிட்டு "தயிர் சாதம்" என்று எண்ணிக்கொண்டிருக்கும் போது "பாயசம்?" என்று ஒரு கரண்டி நீள, கொள்ள இடமின்றி மோர் சாதத்தின் பாதியில் எழுந்து ஓட வேண்டும் என்ற நிலையில் "இனி கல்யாண சாப்பாடே ஆயுளுக்கும் வேண்டாம்!" என்ற எண்ணம் வருமே! அது மறந்ததா?
முடியாத லூப் {
டும்..டும்..டும்..
டர்..டர்...டற்ற்ற்...
}
எண்ட் லூப்
வாழ்க்கை சக்கரம்!
இது உண்மையின் தத்துவம்!
அளவோடு தின்று நலமோடு வாழ்க!
அடெய். இந்தியால உட்கார்ந்துண்டு, எல்லா கல்யாண சாப்பாட்டையும் ஒரு கட்டு கட்டிட்டு இப்படி ஒரு லாஜிக் அடிக்காதே. எங்கள மாதிரி பர்ரிட்டோ தின்னரவங்களுக்கு அது ராஜ போஜனம்.
Idellam konjam overaa therila?
Lunchku mexican three bean chili Lean cusine sapdra makkal kitta , iipidi la solli tension panna koodadhu...
wher do I get tamil font?
c'est la vie:
"ஸ்பெஷல் பந்தில" இன்னும் 4 மாசத்துல கல்யாண சாப்பாடு சாப்பிடும்போது கொஞ்சம் என்ன மாதிரி ஜீவங்களையும் நினைச்சிண்டா சரி.
Post a Comment