கேள்விகளுக்கு பதில் தேடுவோம்.
இந்த இணையத்தில் இந்த பதிப்பை படித்தேன். இதை பார்த்ததில் எனக்கு முததில் தோண்றிய எண்ணங்களை இங்கு பதிவு செய்துள்ளேன். இதைப்படிப்போர்கள் படிப்பது மட்டுமின்றி இதை செயலில் ஆழ்த்த கரங்களை ஓங்கவீர்களென நம்புகிறேன்.
"மிக விளாவரியாக நிரய விஷயங்கள் தெரிவித்திருக்கிறீர்கள். ஆனால் பதிப்பை கேள்விகளுடன் முடித்திருக்காமல் சில விடைகள் பதித்திருந்தால் இன்னமும் வலுவான பதிப்பாக இருந்திருக்கும். எல்லா விஷயங்களுக்கும் அரசை நம்பி இருக்காமல், கல்வியை நமது கையில் எடுத்துக்கொண்டு பரிமாரும் எண்ணம் நம்மைப்போன்ற இளைஞர்களுக்கு வரவேண்டும். உலகிலேயே இளமையான நாடாக இருப்பதனால் பெருமை மட்டும் கொள்ளாமல், அதை சரியாக உபயோகத்தில் ஆழ்த்தினால் நிச்சயமாக 2020 ஆண்டில் மற்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக நம் இந்தியா அமையும். ஒரு மனது கொண்ட இளைஞர்கள் ஒன்றாகச்சேர்ந்து ஒரு குரிக்கோளை அடைய முற்பட்டால், முடியாததென்பது கிடையாது, கேள்விகளுக்கும் இடம் கிடையாது."
3 comments:
2020னு சொல்லிகிட்டே இருக்கலாம். நாம எதுவும் "செய்தாலொழிய" ஒண்ணும் நடக்காது.
பேசரது சுலபம் ஐயா!! செயலிலே இறங்குங்கள். என்ன கல்வி தேவை?!!!
விவசாயிகள் எல்லாம் விவசாயத்தை விட்டுட்டு பட்டணத்துக்கு போய் கூலி வேலை செய்யராங்க! பட்டணத்துல இருக்கரவங்க தண்ணிய காசு குடுத்து வாங்கலாம்னு எண்ணத்துல தண்ணிய தண்ணியா(!!) செலவு பண்ணராங்க!!
என்ன கல்வி இருந்து என்ன புண்ணியம்? என்ன கல்வி வேணும். நம்ம நாடு சிறந்த நாடுங்கர கல்வியும் நம்ம நாட்டு வளமை செழிப்பானதுங்கற கல்வியும், நாம செய்யற தொழில் உயர்ந்ததுங்கற எண்ணமும் வர கல்வி தானேயா வேணும்.
% போட்டா போதுமா? நம்மள்ள எவ்வளவு பேருக்கு ஒரு நெல் விளைக்க என்ன சையவேணும்னு தெரியுமா? இப்படியே போனா நம்மநாட்டுல சோரு கூட இரக்குமதிதான் பண்ணனும்.
பாவம் ஏழை விவசாயி. அவனுக்கு தெரிஞ்சதெல்லாம் நஷ்டம்தான். ஒரு ஏக்கருக்கு ரூ. 15000 போட்டா கிடக்கரது ரூ. 12000. இப்படியே இரண்டு போகம் போச்சுன்னா இருக்கவே இருக்கு தற்கொலை!!
Efficiency, Optimization, Risk Management, Resource Managementனு ஏகமா நம்மள போல தினமும் பஜனை பண்ணரவங்களுக்கு ஏழையோட பரிதவிப்பு எப்படி தெரியும்.
ஒரு ஒருமாசமாவது அந்த விவசாயகூட இருந்தா தெரியுமையா கதை. உங்கள்ள எவ்வளவ்வு பேருக்கு "நேரம்" இருக்குன்னு நினைக்கரீங்க?!!
அரக்க பரக்க அமேரிக்கவுலேரருந்தோ, அஸ்தரேலியாவிலேருந்தோ லீவுக்கு வந்துட்டு திரும்ப ஓடிபோய் நம்ம நாடுமோசமா இருக்குன்னு அழுத மட்டும்தானேயா 100த்துக்கு 99 பேர் செய்யரோம்.
அத்தவுடுங்க. வெளி நாட்டுலா விவசாயம் எப்படி பண்ணறாங்கன்னு பாத்துகிட்டு வந்து நம்ம நாட்டுல சொல்லி குடுக்கறோமா? இல்லை அங்க தூய்மைக்கு கொடுக்கற முக்கியத்துவத்த பத்தி "சொல்லிக்கொடுக்கறோமா?" பொருமை இருக்கா?
திட்டு வாங்க தைரியம் இருக்கா? தேவர் மகன் பட்த்துல சிவாஜி சொல்லுவாரு, "நீதாம்பா இந்த பசங்களுக்கு சொல்லிகொடுக்கணும். இவங்க காட்டு பசங்க. நீதானே படிச்சவன். சொல்லிக்கொடு." அப்படின்னு. இடிவிழுந்தது என் மனசுல அப்போ.
அதோட அத நான் மரக்கலை. அத எப்படி செயல் படுத்தரதுன்னு பல விதத்துல முயற்சி பண்ணிகிட்டு இருக்கேன்.
உங்களைப்போன்ற படித்த இளம் கன்றுகள் இருந்தாலே போதுமே. மாத்திடலாம்ல.
யோசிப்போமா?
பிகு: இங்கு பிரச்சனைக்கு தீர்வு சொல்ல நான் முற்படவில்லை. பிரச்சனை என்ன என்பதை முதலில் தெரிந்துகொண்டு, அதன் பிரகு செயல்லை செலுத்த முற்பட்டேன். தனிமனிதனால் எதையும் சாதிக்க முடியாது. தனிமரம் தோப்பாகாது. இளம் கன்றுகளே, ஒன்றுசேர்ந்து செயல்படுவோமா? நம்மால் முடிந்த சில வேலைகளை அடிக்கற்களாகா வைத்து முற்பட்டால் சிகறம் வெகு அருகில் அல்லவா?
Neruppu Nariyil Tamizh Kolai
passerby:
problems are plenty. But focus is needed to be effective. Ever shifting ideologies never work. Look at Cuba (from my earlier post). Priority is given for education and eventually agriculture became self-sustained there. An educated mind has the free will to achieve anything. It is better to teach a man to fish than to feed him fish. Teaching is educating.
Sriram:
நெருப்பு நரியை நெருப்பிட்டு கொல்லுங்க. மிகச்சிரிய மென்மையின் உலகவலை ஆய்வாளரை உபயோகிங்க.
Post a Comment