Thursday, September 21, 2006

Sports Talk

I think it was the fall of 2000 and I had just finished applying to the universities I had shortlisted. My brother was watching ESPN.

நான்: என்ன கருமம் புடிச்ச game டா இது... ஒருத்தனை ஒருத்தன் அடிச்சிக்கறான்.

அவன்: அடேய். உனக்கு தெரியுமா. உங்க Texas A&M Aggies நல்ல team. நீயும் போறல்ல, அப்புரம் பாத்துக்கலாம்.

நான்: அட போடா. அது என்னிக்கும் நடக்காது. நான் cricket தவிர வேற எந்த game-உம் பாக்கமாட்டேன்.

In TV: A man in zebra shows both his palms to the TV camera.

அவன்: Pass interference. Super. Go Broncos.

நான்: சரியான லூசு. நீயும் போய் மண்டைய உடைச்சிக்கோ.

மன்னி: உங்கண்ணன் பயங்கரமான Broncos fan. Foul-லாம் referee சொல்லறதுக்கு முன்னாடியே correct-ஆ சொல்லிடுவான். (பெருமையுடன் இளித்துக்கொண்டே).

அவன்: ஒரு season போய் பாரு. அப்புரம் பேசிக்கறேன்.

நான்: உன் கனவுலதான் நடக்கும். இந்த கண்றாவியை எவன் பாப்பான்.

அவன்: உங்க கங்குலி ஆடற அழகைப்பாக்கறதுக்கு இது பரவாயில்லை. நான் வந்ததுலேந்து அவனொரு match-உம் ஒண்ணும் கிழிக்கலை. என்ன captain, முதல்ல அவனை team-லேந்து தூக்கணும்.

நான்: India team history-லயே most wins in tests under him. தெரிஞ்சுக்கோ. அவனும் சசினும்தான் best opening pair.

அவன்: என்ன opening pair. Waste game. Sachin is also waste. Team player இல்லை அவன். 100 அடிச்சா போறாது, team win பண்ணித்தாங்கறதுதான் முக்கியம். He is selfish.

நான்: உனக்கு இப்போ ஆடுற team பத்தி என்ன தெரியும். நீ America-ல இந்த அடிச்சிக்குற விளையாட்டு பாத்துட்டு cricket மறந்து போச்சு. Cricket is a gentleman's game. Not like this (என் கைவிரல் TVயை நோக்கி).

அவன்: போடா போ. இன்னும் 2 years-ல பாத்துக்கலாம்.

நான்: ஒண்ணும் நடக்காது. எழுதி வச்சிக்கோ. (வெளியேரினேன்.)

6 வருடங்களுக்கு பிறகு. இரவு 10 மணி பசிஃபிக் தினவிளக்கு சேமிப்பு நேரம் -MSN Messenger.

நான்: டாய்ய்ய்ய்ய்.

அவன்: டாய்ய்ய்ய்ய்ய்ய்ய்.

நான்: என்ன பண்ணிண்டிருக்கே.

அவன்: what news?

நான்: ஒண்ணும் இல்லை. போர் அடிக்கறது.

அவன்: Bore master. Cricket பாக்க ready ஆயிட்டியா?

நான்: அதுக்கு இன்னும் நேரம் இருக்கே. இந்த வாரம் team pick பண்ணிண்டிருக்கேன்.

அவன்: என்னடா Broncos கேவலமா ஆடிண்டிருக்காங்க.

நான்: ஆமாம். But Chargers are doing great. Go Chargers. Last week fantasy football-ல win பண்ணிட்டேன். முதல் வாரம் உதை. இந்த வாரம் கடும் போட்டி இருக்கு. ஒரு நாலு பேரை trade பண்ணி இருக்கேன். பாப்போம்.

அவன்: India win பண்ணிட்டாங்கோ போன match.

நான்: ஆமாம். 20 over பாத்தேன். அப்புரம் தூக்கம் வந்துடுத்து. 5 பேர் வெர out ஆயிட்டாங்கோ. தூங்கிட்டேன்.

அவன்: சசின் ஒண்டிதான் பொருமையா ஆடினான். பாக்கி எல்லாரும் waste. Team-உக்காக அவன் ஒருத்தந்தான் விளையாடறான். இந்த Sehwag தூக்கிட்டு பேசாம Ganguly-யே கொண்டு வந்துடலாம் பொல இருக்கு.

நான்: எல்லாம் match fixing. West Indies-க்கு India-வோட Finals விளையாடணும்னு தோத்துட்டாங்க. இனிமேல் அதை எவன் பாப்பான். All I am concerned is whether to start Michael Vick or Carson Palmer for this weekend. அப்புரம் பாப்போம். Bye.

அவன்: நான் match பாக்கப்போறேன். Good Night. Bye.

2 comments:

ambarish said...

Dei,

இவ்வளவையும் எழுதிவிட்டு கடைசி வரைக்கும் Broncos-உம் Chargers-உம் எந்த விளையாட்டென்றே எழுதவில்லயே?

Bulb.

Driver said...

மன்சிகோபா. (American) Football.